ரூ. 306 கோடி.. திமுகவுக்கு வந்த "அடையாளம் தெரியாத" டொனேஷன்.. !

May 18, 2023,01:34 PM IST

டெல்லி: பிராந்தியக் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து (unknown sources) பெருமளவில் நிதி வந்திருப்பதாக ஜனநாயக சீரமைப்பு அமைப்பு (ADR) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்தியக் கட்சிகளுக்கு கடந்த 2021- 22 நிதியாண்டில் வந்த நன்கொடைகள் குறித்த விவரத்தை அது வெளியிட்டுள்ளது. பிராந்தியக் கட்சிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் நிதி வந்திருப்பதாக தெரிவித்துள்ள ஏடிஆர் அதில் கிட்டத்தட்ட ரூ. 887.55 கோடி நிதி, அடையாளம் தெரியாத மூலங்களிடமிருந்து வந்ததாக கூறியுள்ளது.



அடையாளம் தெரியாத மூலங்கள் என்றால் - தேர்தல் பான்டுகள் மூலம் வந்த நன்கொடைகள், கூப்பன் விற்பனை, நிவாரண நிதி, இதர வருமானங்கள்,  தானாக முன்வந்து தரும் நன்கொடைகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் என்பதாகும்.

பிராந்தியக் கட்சிகளுக்கு வந்த நிதியில் தேர்தல் பாண்டுகள் மூலம் 827.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கூப்பன் விற்பனை மூலம் கிடைத்த நிதி ரூ. 38.35 கோடியாகும். தானாக முன்வந்து அளித்த நிதி ரூ. 21.29 கோடியாகும்.

மொத்தம் 54 அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் அதில் பாதிக் கட்சிகள்தான் வருடா வருடம் தங்களது நிதிக் கணக்கு விவரத்தை முறையாக தாக்கல் செய்கின்றன.  இந்தக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ. 1165.58 கோடியாகும்.  இதில் தெரிந்த நிதியாதாரங்கள் மூலம் கிடைத்த நன்கொடைகள் ரூ. 145.42 கோடியாகும்.

அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து அதிக நிதி வந்தது திமுகவுக்குத்தான். அக்கட்சிக்கு ரூ. 306 கோடி இதுபோலவந்துள்ளது. அடுத்து ஒடிஷாவின் பிஜூ ஜனதாதளத்திற்கு ரூ. 291 கோடியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு ரூ. 153 கோடியும் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்