சென்னை : நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற படுதோல்விக்கு என்ன காரணம் என்பதை திமுக.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
முரசொலியின் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதை முன்கூட்டியே எடுத்துக் காட்டும் விதமாக கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை கர்நாடகா காட்டி உள்ளது. பாஜக.,வின் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த தேர்தலிலேயே அளவிட்டு தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை பிரதம் மோடி மானப் பிரச்சனையாக கருதுகிறார். கர்நாடக மக்களின் விருப்பங்கள் தன்னுடைய விருப்பம் என்றும், கர்நாடக மக்களின் முடிவு தன்னுடைய முடிவு என்றும் கூறி இருந்தார்.
கர்நாடக தேர்தலில் பாஜக.,வின் படுதோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இஸ்லாமியர்கள் மீது வெளிப்படையாக காட்டிய வெறுப்புணர்வு தான். குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்படும், ஒரே மாதிரியான குடியுரிமை குறியீடு கொண்டு வரப்படும் என கர்நாடக மக்களுக்கு பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக வெளிப்படையாக அறிவித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை வெளிப்படையாக ஆதரித்தது.
கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, தங்களுக்கு இஸ்லாமிய ஓட்டு ஒன்று கூட தேவையில்லை என பேசினார். பாஜக.,வை சேர்ந்த மற்றொரு தலைவர் சி.டி.ரவி, திப்பு சுல்தானின் ஆதரவாளர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என பேசினார் என தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கூட்டணிக் கட்சியான திமுக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக.,வின் தோல்விக்கான காரணங்கள் குறித்து முரசொலியில் நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}