அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்

Mar 14, 2026,11:16 AM IST

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தை' (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதற்கான முயற்சிகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கூட்டணி தலைமையான அதிமுக.,விடம் கூட்டணிக்கு தான் வருவதற்கு 2 கன்டிஷன்களை விஜய் போட்டுள்ளதாக ஒரு தகவல் கடந்த 2 நாட்களாக அரசியல் வட்டாரத்திலும், மீடியா வட்டாரத்திலும் வேகமாக பரவி வருகிறது.


பாஜகவின் தேர்தல் வியூகம் :


தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளம் மற்றும் இளைஞர்களின் ஆதரவு ஆகியவை தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தலைமை கருதுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, தமிழகத்தில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதில் 2 சதவீத வாக்குகள் கூட முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், விஜய்யின் ஆதரவு தங்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்று பாஜக கணக்கு போடுகிறது. இதற்காகப் பல்வேறு வழிகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


ரகசியப் பேச்சுவார்த்தைகள்:




விஜய்யுடன் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு பாஜக தரப்பிலிருந்து முக்கியத் தலைவர்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆரம்ப கட்டமாக இருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில், தேர்தல் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி அமைப்பதால் இரு தரப்புக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாஜகவின் இந்த அழைப்பை ஏற்பதில் விஜய்யின் ஆலோசகர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.


ஆனால் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என அதிமுக, பாஜக. தவெக ஆகிய தரப்புகளில் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சில தலைவர்கள் சூசகமாக, கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து கொண்டாடுவோம் என கூறி வருகின்றனர். கட்சிகள் கூட்டணி பேச்சை மறுத்தாலும், என்டிஏ கூட்டணிக்கு போகும் முடிவிற்கு விஜய் வந்து விட்டதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. விஜய், அதிமுக தலைமையிடம் தான் கூட்டணி பேச்சை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. கூட்டணிக்கு தான் வர வேண்டும் என்றால் 2 கன்டிஷன் என விஜய் சொல்லி உள்ளாராம்.


1. தவெக.,விற்கு 90 சீட்கள் ஒதுக்க வேண்டும்.

2. பாஜக.,வை கழற்றி விட்டு வாருங்கள். நாம் இருவரும் கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம். முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்த கொள்ளலாம்.


இது சாத்தியமா?


அரசியல் களத்தில் ஹாட் டாக்காக போய் கொண்டிருக்கும் இந்த 2 கன்டிஷன்களை விஜய் விதித்திருக்கவும், அதை அதிமுக ஏற்பதற்கும் சாத்தியமா என கேட்டால் கண்டிப்பாக கிடையாது. தவெக.,விற்கு 90 சீட், அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படுகிறது என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெரும்பான்மையான 118 இடங்களுக்கும் அதிகமாக பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 130 முதல் 150 இடங்களிலாவது போட்டியிட வேண்டும். அப்போது தான்  120 இடங்களிலாவது வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பெற முடியும். அதிமுக-140, தவெக-90 என்று வைத்துக் கொண்டால் கூட 234 தொகுதிகளில் மீதமும்ம 4 தொகுதிகளை பாஜக, தமாக, பாமக என எப்படி கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க முடியும்? ஒருவேளை அதிமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்தால் அது அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.


அதே போல் பாஜக.,வை கழற்றி விடுவது என்பது இப்போது சாத்தியமே கிடையாது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்து பிரதமரே தமிழகம் வந்து பிரச்சாரத்தை துவக்கி வைக்கும் அளவிற்கு சென்று விட்ட பிறகு அது நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படி நடப்பதற்கு நிச்சயம் பாஜக.,வும் விடாது. அப்படி இருக்கும் போது விஜய் போட்டதாக சொல்லப்படும் 2 கன்டிஷன்களும் சாத்தியமற்றது. அதனால் தவெக, என்டிஏ கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கேஸ் சிலிண்டர் இல்லை.. பிறந்த நாளும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை கண்டனம்

news

பாட்டிலுக்குள் ஒரு உலகம்.. The World in the Bottle

news

திமுக செந்தில் பாலாஜிக்கு எதிராக விஜய்யின் தவெக துவக்கி உள்ள "டாக்கெட் கரூர்"

news

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!

news

அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்

news

கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்