சென்னை : சென்னையில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது முழுவதுமாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

முதல் கட்டப் பணிகள் முடிந்து தற்போது விம்கோ நகர் டெப்போ முதல் விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
54.1 கி.மீ., தூரத்தை இணைக்கும் இந்த மெட்ரோ திட்டத்தில் 41 நிறுத்தங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி பலரும் அறியாத விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக 82 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு போடப்பட உள்ள இந்த திட்டத்தில் 128 நிறுத்தங்கள் உள்ளடக்கியதாக இருக்கும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ., லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கி.மீ., மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி.மீ., ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்காக 112.72 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 93 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே கையப்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள நிலங்கள் வடபழனி காளியம்மன் கோவில் தெரு, ஆர்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. இங்குள்ள நிலங்களை பெறுவது பெறும் சவாலாக உள்ளதால் மெட்ரோ பணிகள் தாமதமாவதாக சொல்லப்படுகிறது.
ரூ.63,246 கோடியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த மெட்ரோ பணிகள் 2026 ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் பூந்தமல்லி முதல் பவர் ஹவுஸ் வரையிலான மெட்ரோ பணிகளை 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ளதை போலவே ஒவ்வொரு நிறுத்தத்திலும் இரண்டு வழிகள் இருப்பது போல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}