டெலிவரி ஊழியர் மீது வெறியுடன் பாய்ந்த டாபர்மேன்.. 3வது மாடியிலிருந்து குதித்து படுகாயம்!

May 23, 2023,01:13 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமேசான் டெலிவரி ஊழியர் மீது டாபர்மேன் நாய் வெறியுடன் கடிக்கப் பாய்ந்ததால், அவர் பயந்து போய் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார்.

ஹைதராபாத்தின் மணிகொண்டா என்ற பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் மிகக் குறுகிய காலத்தில் இதுபோல டெலிவரி ஊழியர்கள் மீது நாய்கள் பாயும் 3வது சம்பவம் இது. வீடுகளில் நாய்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைக்காமல் விடுவதால் இதுபோல சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணிகொண்டாவில் உள்ள பஞ்சவாடி காலனியில் உள்ள ஒரு வீட்டினர் அமேசானில் பொருள் ஆர்டர் செய்திருந்தனர். அந்தப் பொருளை கொடுப்பதற்காக அமேசான் டெலிவரி ஊழியர் வந்திருந்தார். அப்போது வீட திறந்து கிடந்தது. காலிங் பெல்லை அடித்து விட்டு ஊழியர் காத்திருந்தபோது, வீட்டுக்குள்ளே இருந்து டாபர்மேன் நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து ஊழியர் மீது பாய்ந்தது.



நாய் திடீரென வந்து பாய்ந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் அந்த நாயிடமிருந்து தப்ப 3வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படவே அங்கிருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் நாம் நாய்களைக் குறை சொல்ல முடியாது. அவற்றுக்கு அந்நியர் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவர்களைப் பார்த்த குரைக்கவும், தடுக்கவும், தாக்கவும்தான் தெரியும். அதுதான் அவற்றின் கடமை. அவற்றின் கடமையை நாய்கள் சரியாக செய்கின்றன. ஆனால் வீட்டில் இருப்போர்தான் கவனமாக இருக்க வேண்டும். முறையாக நாய்களை கட்டிப் போட்டிருக்க வேண்டும் அல்லது அந்நியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இடத்தில் நாய்களை வைத்திருக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்