ஸ்டாலின் வெட்டிய "கேக்"... துரைமுருகன் மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும் ?!

Mar 01, 2023,12:52 PM IST
சென்னை : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் இன்று (மார்ச் 01) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னையில் 70 இடங்களில் ஸ்டாலினின் புகைப்படத்துடன், திராவிட நாயகன் என்ற வாசகத்துடன் பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.



தொண்டர்கள், கட்சி நிர்வாகள் என பலரும் கேக் வெட்டி, முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதில் சென்னையில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.,க்கள் உடன் பிறந்த நாளை கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின். திமுக கட்சி நிறமான கருப்பு, சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கேக் ஒன்றை ஸ்டாலின் வெட்ட, மற்றவர்கள் கை தட்டி வாழ்த்து கூறும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.




இந்த போட்டோவில் மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டும் ஸ்டாலினை பார்த்துக் கொண்டிருக்க, அவர் அருகில் நிற்கும் அமைச்சர் துரைமுருகன் மட்டும் கேக்கை முறைத்து பார்த்தபடி நிற்பது போல் உள்ளது. துரைமுருகனின் மைன்ட் வாய்ஸ் என குறிப்பிட்டு, இந்த போட்டோவை வைத்து மீம்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தீயாய் பரவி வருகிறது.

"கேக் ரொம்ப சின்னதா இருக்கே...நமக்கு கிடைக்குமா?", "இவ்வளவு சிருசா யாருய்யா கேக் வாங்கிட்டு வந்தது?", "நம்ம பிறந்தநாளுக்கும் இப்படி கேக் வாங்கி வெட்டணும்", என கண்டபடி ஜாலியாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

துரைமுருகன் போட்டோக்கள் எப்போதுமே ஜாலியாக வைரலாவதுண்டு.. அந்த வகையில் இதுவும் வைரலாகி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்