அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Jun 13, 2023,11:44 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



5 வானங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் வீட்டிலேயே சோதனை நடந்து வருகிறது.

இதனால் விரைவில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நேரடி விசாரணையை துவக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு புறம் திமுக.,வில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அமலாக்கத்துறையின் பிடியில் அவர் சிக்கி உள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்