ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருத்தர் போதும் ஓட்டு எங்களுக்கு தான்... காங்.ஐ கலாய்த்த அண்ணாமலை

Feb 09, 2023,03:35 PM IST
சென்னை : கடந்த தேர்தலில் ராகுல் காந்தி எங்களை வெற்றி பெற வைத்ததை போது,  இந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருவர் போதும். அவர் பேசினாலே எங்களுக்கு ஓட்டு வந்து விடும் என காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



சென்னையில் இன்று மரம் நடுவிழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அண்ணாமலை, கடந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் ராகுல் காந்தி. அது போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் பிரச்சார பீரங்கி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான். அவர் மட்டும் பேச ஆரம்பித்தால் போதும். தானாக எங்களுக்கு ஓட்டு வந்துவிடும். தமிழகத்தில் ஆளுங்கட்சி பயத்தில் உள்ளது.

அதனால் தான் திமுக., ஒட்டுமொத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி உள்ளது. இல்லா விட்டால் இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கு எதற்காக இத்தனை அமைச்சர்களை நியமித்துள்ளது. தமிழகம் - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்றார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் சரி பார்க்கப்பட்டு, ஈரோடு இடைத்தேர்தலில் 82 பேர் இறுதி வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்