ரம்ஜான் 2023 நல்வாழ்த்துக்கள் : சவுதி அரேபியாவில் இன்று.. இந்தியாவில் ரம்ஜான் எப்போது?

Apr 21, 2023,01:23 PM IST
சென்னை : ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வருவது ரமலான் மாதம். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைவனால் முகம்மது நபிகள் பெருமானாருக்கு அருளப்பட்டது. இதனால் ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை பெறுவதற்காக இஸ்லாமியர்கள் கடுமையான நோன்பு கடைபிடிப்பதையும், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 29 அல்லது 30 நாட்களைக் கொண்ட ரமலான் மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் பொழுது முழுவதும் தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல், தொழுகை, திருக்குரான் வாசிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு இறை சிந்தனையிலேயே இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஃப்தார் விருந்துடன் நோன்பு திறப்பதை இஸ்லாமியர்கள் மேற்கொள்கிறார்கள்.



ரமலான் மாதம் நிறைவடைந்து பத்தாவது மாதமான ஷாவ்வல் மாதத்தின் துவக்க நாளில் நோன்பினை நிறைவு செய்து, அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ரமலான் மாதம் பிறை தெரிவதன் அடிப்படையில் கணக்கிட்டு துவங்கப்படுகிறது. பிறை தெரிவதில் துவங்கி, மீண்டும் பிறை தெரியும் வரை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. பிறை தெரிவதன் அடிப்படையிலேயே ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரமலான் மாதம் மார்ச் 24 ம் தேதி துவங்கியது. 

பிறை என்பதை வெறும் கண்களால் காண முடியாது. டெலஸ்கோப் போன்ற கருவிகளைக் கொண்டே காண முடியும். ஆனால் தலைமை ஹாஜி அல்லது இஸ்லாமிய அமைப்புக்கள் பிறை தெரிந்ததாக அறிவிப்பதை வைத்தே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி பிறை தெரியவில்லை. இதனால் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட உள்ளது, ரம்ஜான் விடுமுறையை எந்த நாளில் அறிவிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் முதல் ஆளாக பிறை தெரிந்ததாக சவுதி அரேபியாவில் தலைமை ஹாஜி அறிவித்தார். இதனையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகள், இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 21 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய நாடுகளில் ஓமனில் மட்டும் ஏப்ரல் 21 ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை இஃப்தார் விருந்துடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில், அனைவரும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்