ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. இன்று "பணம் + பரிசு மழை".. நாளை வாக்குப் பதிவு!

Feb 26, 2023,11:05 AM IST

ஈரோடு:  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுகளும் தருவது கொஞ்சம் கூட குறையவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.


அனல் பறக்க நடந்து வந்து தேர்தல் பிரச்சாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களைக் கவர சரமாரியாக பணத்தை இறக்கி விட்டன. இதில் திமுகவின் பங்குதான் அதிகம் என்று சொல்கிறார்கள். மொத்த அமைச்சர்களையும் திமுக களத்தில் இறக்கியுள்ளது. போதாக்குறைக்கு சென்னை மாநகர மேயர் பிரியாவையும் கூட்டி வந்து பிரச்சாரம் செய்தனர்.


திமுக இந்த வெற்றியை தனது வெற்றியாகவும், ஆட்சிக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்பது போலவும் பார்க்கிறது. அதிமுகவோ, தனது பலத்தை நிரூபிக்க துடிக்கிறது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியும் தன் பங்குக்கு போட்டியைக் கடுமையாக்கியுள்ளது. திமுகவுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கடும் மோதலும் கூட தொகுதியில் மூண்டது. சீமானின் பேச்சுக்களால் அருந்ததியினர் சமுதாயத்தினரும் கடும் கோபமடைந்தனர்.


இப்படி அனல் பறக்க நடந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆனாலும் பண மழை இன்னும் ஓயவில்லையாம்.. பரிசு மழையும் அடங்கவில்லையாம். கொலுசு, மூக்குத்தி, பரிசு டப்பா, சேலை, வேட்டி என்று சரமாரியாக திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்குக் கொடுத்து வருகின்றனர். இரு கட்சியினரும் டோக்கன்கள் கொடுத்து பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறார்களாம். இதை  வாங்க மக்களும் முண்டியடிப்பதாக சொல்லப்படுகிறது.


ஈரோடு கிழக்கு.. குடிமகன்களுக்கு பேட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு!


இப்படிப்பட்ட கொடுமையான சூழலில்தான் நாளை தேர்தல் நடைபெறப் போகிறது. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் ஆவர். இதில் ஆண்  வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆகும். அதாவது பெண் வாக்காளர்களே அதிகம். இதனால்தான் மூக்குத்தி, கொலுசு என களம் இறங்கி விட்டன கட்சிகள்.  25 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.


இடைத் தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


வேட்பாளர்கள் விவரம்:


  • ஆனந்த் - தேமுதிக
  • மேனகா நவநீதன் - நாம் தமிழர் கட்சி
  • தென்னரசு - அதிமுக
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் - காங்கிரஸ்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்