பகலில் வெளியில் செல்லும் மக்களே உஷார்

Jul 31, 2023,05:07 PM IST
சென்னை : பகலில் வெளியில் செல்லும் தமிழக மக்களுக்காக வானிலை மையம் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சாமாணிய மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மழை, கனமழை, மிதமான மழை குறித்த தகவல்களையே சென்னை வானிலை மையம் வெளியிட்டு வந்தது. சென்னை வானிலை மையம் தெரிவித்தது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை, கோவையில் மழை கொட்டி தீர்த்தது.



இந்நிலையில் தற்போது அடுத்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது மழை பற்றிய அறிவிப்பு கிடையாது. வெப்பநிலை குறித்த அறிவிப்பு தான் வந்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு பகலில் வெளியில் சென்று வேலை செய்வோரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே பாடாய்படுத்திய கோடை வெயிலின் தாக்கம் இப்போது தான் குறைந்துள்ளது என நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்