அதெல்லாம் கிடையாது.. மதுராவில்தான் மறுபடியும் போட்டியிடுவேன்.. ஹேமமாலினி

Jun 06, 2023,12:13 PM IST
மதுரா: மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் மதுரா தொகுதியிலிருந்து மட்டுமே போட்டியிடுவேன். வேறு தொகுதிக்கு மாற மாட்டேன் என்று கூறியுள்ளார் அத்தொகுதியின் எம்.பியும், பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை ஹேமமாலினி.

ஹேமமாலினி உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியிலிருந்து கடந்த 2 முறையாக உறுப்பினராக இருந்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் அவர் இதே தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்ற பேச்சு இப்போது கிளம்பியுள்ளது.



இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஹேமமாலினி கூறுகையில், மீண்டும்  நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் மதுரா தொகுதியில்தான் போட்டியிடுவேன்.  வேறு தொகுதியில் போட்டியிடச் சொன்னால் போட்டியிட மாட்டேன்.  கட்சி மதுராவில் போட்டியிடச் சொல்லும் என்றே நம்புகிறேன்.

மதுரா மீதும், மதுரா மக்கள் மீதும் எனக்கு உள்ள அன்பு அபரிமிதமானது. அதை விட முக்கியமாக கிருஷ்ணர் மற்றும் அவரது பக்தர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சி இதை உறுதி செய்யும் என்றார் ஹேமமாலினி.

2014ம் ஆண்டு முதல் முறையாக மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஹேமமாலினி. தொடர்ந்து 2019 தேர்தலிலும் வென்றார். அதற்குமுன்பு அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்