உப்புமா பிரியரா நீங்கள்?...அப்படியானால் இது உங்களுக்கான டிப்ஸ் தான்!

Jan 07, 2023,12:19 PM IST
உப்புமா பிடிக்கும் என்று சொல்பவர்களை விட, உப்புமாவா? என கேட்டு தெறித்து ஓடுபவர்களையே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனாலும் உப்புமாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. மூன்று வேளையும் உப்புமா கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் அளவிற்கு உப்புமா மீது தீராத காதல் கொண்டவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.





அப்படிப்பட்ட உப்புமா பிரியர்களுக்காக தான் இந்த டிப்ஸ். எளிதில் ஜீரணம் ஆவத்துடன், கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பி விட்டது என்ற உணர்வை தரக் கூடிய எளி உணவு தான் உப்புமா. உப்புமாவே எளிதில் செய்யக் கூடிய உணவு தான். ஆனால் எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்ற எந்திரமயமான, அவசர காலத்தில் நாம் இருக்கும். அப்படி சமைக்க தெரியாது, சமைக்க நேரம் என்று சொல்பவர்களுக்கு ரெடிமேட் உப்புமாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தான் இங்கே பார்க்க போகிறோம்.

இந்த ரெடிமேட் உப்புமா மிக்சை பல நாட்கள் வரை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். வெளியூர், வெளிநாடு செல்பவர்கள், சமைக்க தெரியாதவர்களுக்கும் இனி பெரிதும் பயன்படும். அவசரமாக காலை உணவு தயாரிக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது பெரிய கிஃப்டாக இருக்கும்.

ரெடிமேட் உப்புமா மிக்ஸ் செய்யும் முறை : 

தேவையான பொருட்கள் :

ரவை
நல்லெண்ணைய்
கடுகு
உளுந்தம் பருப்பு
கடலை பருப்பு
மிளகாய் வற்றல்
கருவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
முந்திரி அல்லது வேர்க்கடலை

செய்யும் முறை :

அனைத்து பொருட்களும் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமாக தீயில் வைத்து, வாணெலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விட வேண்டும். அதற்கு பிறகு கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். அதோடு மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது முந்திரி அல்லது வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். விரும்பாதவர்கள் இதை தவிர்த்து விடலாம்.

அனைத்தும் நன்று வறுபட்டதும் சிறிது பெருங்காயம், எடுத்திருக்கும் ரவையின் அளவிற்கு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வேண்டும். கடைசியாக ரவையையும் இந்த பொருட்களுடன் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பிறகு இதை அப்படியே ஆற வைத்து தண்ணீர் படாத, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

உப்புமா தேவைப்படும் சமயத்தில் வறுத்து வைத்திருக்கும் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்து, ரவை இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி, அப்படியே  மூடி வைத்து விட வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், சுட சுட ஆவி பறக்கும் உப்புமா ரெடி.

வெறும் வெந்நீர் மட்டும் இருந்தால் போதும் இந்த ரெமேட் உப்புமா மிக்சை பயன்படுத்தி உப்புமா செய்து உடனடியாக சாப்பிடலாம். இந்த மிக்சை தயார் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படு��் சமயத்தில் உடனடியாக ரவை உப்புமா, ரவை கிச்சடி, ரவா தோசை, ரவா இட்லி என எது வேண்டுமானாலும் செய்து அசத்தலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

news

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்