டீ, காபி.,க்கு கூட ஏடிஎம்., வந்துடுச்சு...இதுவும் இந்தியாவில் தான்

Jun 17, 2023,01:27 PM IST
ஹைதராபாத் : உலகின் முதல் தண்ணீர், டீ, காபிக்கான ஏடிஎம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிஸ்கெட்டும் கூடுதலாக வருகிறது என்பதுதான் ஹைலைட்டாகும்.

எந்த மனிதனின் உதவியும் இன்றி முழுக்க முழுக்க தண்ணீர், டீ, காபி ஆகியவற்றை எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த ஏடிஎம் மிஷின் வழங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மிஷின் பயன்படுத்துவதற்கும் மிக எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 



அதை அழுத்து, இதை அழுத்து, அங்கு செல்ல வேண்டும் என பல கட்டமாக வாடிக்கையாளர்களை போராட வைக்���ாமல் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி இந்த மிஷினில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.  பொருளை தேர்வு செய்து விட்டு, க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், பிரஸ் செய்து, ரிலீஸ் கொடுத்தால் போதும், நாம் வேண்டிய பொருள் வந்து விடும். 

அது மட்டுமல்ல புதிதாக இந்த ஏடிஎம் மிஷினை பயன்படுத்துபவர்களுக்கு உதவுவதற்காக குரல் மூலம் அந்த மிஷினே வழிகாட்டுகிறது. இந்த ஆட்டோமெடிக் மிஷினை வடிவமைத்தது வினோத் குமார் என்பவர். இந்த டீ, காபி ஏடிஎம் மிஷின் மால்கள், மெட்ரோ நிலையங்களிலும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.

உலக அளவில் இப்படிப்பட்ட ஏடிஎம் மெஷின் இதுதான் முதல் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த ஏடிஎம் மெஷின் புதிய சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்