கரூர், ஈரோட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

May 29, 2023,12:45 PM IST
கரூர்/ஈரோடு : ஈரோட்டில் டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்ம் வீட்டில் அதிகாரிகள் 4வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சோதவை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்தரக்காரர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்தம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர். சச்சிதானந்தம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.



தமிழக மின்துறை மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோதவையிட வந்த அதிகாரிகளை சிலர் தடுக்க முயன்றனர். அதிகாரிகளை தடுக்க வந்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரூர், ஈரோடு, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் சச்சிதானந்தம் வீட்டில் இருந்து இதுவரை ரூ.2.1 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இந்த சோதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரிலும் தொடர்ந்து ஐடி ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்