புதுடில்லி : 2025 ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்., ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 13) துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அமர்வின் முதல் நாளே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி பாஜக குரல் எழுப்ப, அதானி கடன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. அமளிக்கு இடையே அதானி கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவனம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி விதிகளின்படி எந்த நிறுவனத்தின் கடன் விபரத்தையும் வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் விமான நிலையங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி, 2025 ம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}