சர்வதேச தாய் மொழி தினம் 2023 : தாய்மொழியின் முக்கியத்துவமும், வரலாறும்!

Feb 21, 2023,11:16 AM IST
புதுடில்லி : மனித இனம் பரிமாண மாற்றம் அடைந்ததன் முக்கிய அடையாளம் மொழி. இதன் மூலமே ஒருவர் தனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாற உதவுகிறது. மொழி பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடு, இடத்திற்கும் ஏற்றது போது மொழியும் மாறுபாடு அடைகிறது.



எத்தனை மொழிகளில் கற்றுத் தெரிந்தாலும், ஒரு மனிதனுக்கு உயிராக இருப்பது தாய்மொழி மட்டுமே. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழிகளை உயர்வாகவும், தாய்மொழியை சாதாரணமாகவும் நினைக்கும் போக்கு மனிதர்களிடம் அதிகரித்து வருவதால் பேசப்படாததால் பல மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

உலக தாய் மொழி தினம் கொண்டாடுவதன் நோக்கம் : 

இதை தடுக்கும் முறையாகவும், தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய் மொழி தினமாக கொண்டாடப்படகிறது. கலாச்சார பாதுகாப்பு, பண்முகத்தன்மை, பல மொழிகளை கற்க வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும். நூற்றுக்கணக்கான மொழிகளின் தாயாகமாக உள்ளது இந்தியா. பல கலாச்சாரங்கள், பல மொழிகள், இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. 


உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு :

மொழி, தகவல் தொடர்புக்கான சாதனம் மட்டுமல்ல ஒரு கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளம். சர்வதேச தாய்மொழி தினம் உருவானது வங்கதேசத்தில் தான். 1952 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி வங்க மொழியை தங்களின் தாய்மொழியாக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்த 4 மாணவர்கள் கொல்லப்பட்டதன் நினைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1999 ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. இதை ஐநா பொதுச் சபை வரவேற்றிருந்தது. மொழிகளை பாதுகாக்க வேண்டும். அது உலக மக்களால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்