இறையன்பு, சைலேந்திர பாபு இன்று ஒரே நாளில் ஓய்வு

Jun 30, 2023,11:28 AM IST
சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளராக சிதாஸ் மீனாவும், டிஜிபி.,யாக சஞ்சய் அரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக இறையன்பு மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர் பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு கெளரள பதவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவும், உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரை இந்த பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



இதே போல் இறையன்பு ஐஏஎஸ்.,க்கும் கெளரவ பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் வேண்டாம் என இறையன்பு ஏற்கனவே மறுத்து விட்டதால் தனது ஆலோசகராக தனது பக்கத்திலேயே இறையன்பை வைத்துக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 15, 2025... இன்று பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்