சென்னை : சிவ பெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ருத்ர ரூபமாக விளங்கக் கூடியவர் கால பைரவர். இவர் சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர். இப்போதும் கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகு கோவிலின் சாவியை பைரவரிடம் ஒப்படைக்கும் வழக்கம் உள்ளது.
அந்தகாசுரன் என்ற அசுரன் சிவ பெருமானிடம் இருளை வரமாக பெற்றவன். அந்த இருளைக் கொண்டு, உலகையே இருளில் மூழ்க வைத்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். அப்போது சிவனிடம் இருந்து ருத்ர மூர்த்தியாக வெளிப்பட்ட பைரவர், அந்தகாசுரனை அழித்து அனைவரையும் காத்தார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு சூப்பர் சம்பளம்.. பாகிஸ்தான் கேப்டனை விட ஜாஸ்தி.. நெட்டிசன்கள் டிரோல்!
கால பைரவர் பல ரூபங்களில், பல பெயர்களில் அருள்பாலிக்கிறார். இவர் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையிலும் சூடியும் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கக் கூடியவர். இவரது வாகனமாக நாய் உள்ளது. இவரே நவகிரகங்களின் பிராணனாக விளங்குபவர்.
பொதுவாக அஷ்டமி நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்பார்கள். ஆனால் இது வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அதிலும் தேய்பிறை திதியில் வரும் அஷ்டமி நாள் கால பைரவரை வழிபட மிகவும் ஏற்ற காலமாகும். வில்வ மாலை, தாமரை மாலை, தும்பை மாலை இவற்றை சாத்தி, மல்லிகை தவிர மற்ற வாசனை மலர்களால் பைரவரை வழிபட வேண்டும்.
மிளகு கலந்த வடை மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். மரண பயம், தீவினைகள், நவகிரக தோஷங்கள் நீங்கும். பைரவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}