யாரும் இப்படி யோகா செஞ்சு பார்க்கலியே... "ஆஹா.." போட வைத்த கீர்த்தி சுரேஷின் வீடியோ!

Feb 15, 2023,10:13 AM IST
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள யோகா வீடியோ ரசிகர்களை கவர்ந்ததுடன், இணையத்தையும் கலக்கி வருகிறது. இந்த வீடியோவிற்கு பிரபலங்கள் பலரும் லைக்குகளை குவித்துள்ளனர்.



பொதுவாக நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஃபிட்னசிற்காக பல விதமான பயிற்சிகள் செய்வது வழக்கம். அதில் சமீப காலமாக நடிகைகள் பலரும் பலவிதமாக ஃபிட்னஸ் பயிற்சி எடுத்து வருவது அதிகரித்து வருகிறது. 

அப்படி ஃபிட்னசிற்காக அவர்கள் ஜிம்மில் செய்யும் ஒர்க் அவுட்கள், சைக்கிளிங் செல்வது, வாக்கிங் போவது, யோகா செய்வது  உள்ளிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லைக்குகளை அள்ளுவார்கள்.

அதே போல் நடிகை கீர்த்தி சுரேசும் தற்போது யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். யோகா செய்து உடல் எடையை ரொம்பவே குறைத்து, சிக்கென்று ஸ்லிம் ஆகி விட்டார். இந்நிலையில் தற்போது animal flow yoga செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுடன், இயற்கையாக ஒன்றாக கலந்து விட்டேன். வெற்றிகரமாக அனிமல் ஃபுளோ யோகாவை முதல் முறையாக நிறைவு செய்து விட்டேன் என கேட்ஷன் பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது ஃபிட்னசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக சாணி காயிதம் படத்தில் நடித்திருந்தார். தற்போது டைரக்டர் சந்துரு இயக்கும் புதிய படத்தில் லீட் ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார். பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என டைட்டில் வைத்துள்ளனர். சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு எப்படி அதிரடிக்கு மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்