சேர்த்த பணம் எல்லாம் போச்சு... கடன்காரனாக இருக்கிறேன்... அண்ணாமலை ஓப்பன் டாக்!

Mar 19, 2023,03:31 PM IST
சென்னை : போலீஸ் அதிகாரியாக இருந்து சேர்த்த பணம் எல்லாம் தேர்தலில் செலவாகி விட்டது. இப்போது கடன்காரனாக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓப்பனாக பேசி அளித்துள்ள பேட்டி செம வைரலாகி வருகிறது.

அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கூட்டணி பற்றி முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும். தமிழக பாஜக தலைவராக ஆன பிறகு நிறைய சொத்து சேர்த்து விட்டதாக பலரும் என்னை பற்றி கூறி வருகின்றனர்.



போலீஸ் அதிகாரியாக இருந்த போது சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து விட்டேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை தேர்தலில் செலவழித்து விட்டு இப்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என மீம்ஸ் போட்டு அண்ணாமலையை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் அண்ணாமலை தனது பேட்டியில், நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி அல்ல. தேர்தலை சந்திப்பது குறித்து எனது நிலைப்பாட்டை கூறினேன். அவ்வளவு தான். எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

news

'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'

news

தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்

news

கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை

news

இளைஞர்களின் எழுச்சி நாயகன்!

news

தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

news

மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்