தோனிக்கு முழங்காலில் ஆப்பரேஷன்.. வெற்றிகரமாக முடிந்தது

Jun 02, 2023,04:28 PM IST
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான தோனி, ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் தலைமையிலான சென்னை அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது. தோனி தலைமையிலான அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவது 5வது முறையாகும்.



2023 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி, 12 போட்டிகளில் விளையாடி 104 ரன்கள் எடுத்திருந்தார். இந்த தொடரில் மிகக் குறைந்த ரன்களிலேயே தோனி அவுட்டாகி வந்தார். இதற்கு காரணம் அவரது முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் தான். இதனால் அவரால் வேகமாக ஓட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். ஐபிஎல் பைனலின் போது கூட டிரெசிங் ரூமில் தோனி தனது முழங்கால் காயத்திற்கு கட்டு போட்டுக் கொண்ட வீடியோ ஒன்று வைரலானது.

2023 ஐபிஎல் உடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக முடிவு செய்திருந்தார் தோனி. ஆனால் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் காட்டும் அன்பிற்காக ஒன்னொரு சீசனில் விளையாடிய பிறகு ஓய்வை அறிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கும் தான் கொடுக்கும் கிஃப்ட் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார். இன்னும் சிறிது நாட்கள் தோனி ஓய்வில் இருப்பார் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்