32 வயது காதலியை கொன்று.. துண்டுதுண்டாக வெட்டி.. வேக வைத்த 56 வயது கொடூரன்!

Jun 08, 2023,12:22 PM IST
மும்பை:  மும்பையில் 32 வயது லிவ் இன் பார்ட்னர் பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி, குக்கரில் போட்டு வேக வைத்து அப்புறப்படுத்த முயன்ற 56 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மும்பை புறநகரில் உள்ளகீதா நகரில் உள்ள கீதா ஆகாஷ் தீப் அபார்ட்மென்ட் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் சஹானி. 56 வயதாகும் இவர் கடநத் 3 வருடமாக இங்கு வசித்து வருகிறார்.  அவருடன் சரஸ்வதி வைத்யா என்ற பெண்ணும் வசித்து வந்தார். அப்பெண்ணுக்கு 32 வயதுதான் ஆகிறது. இருவரும் லிவ் இன் பார்ட்னர்களாக இருந்து வந்தனர்.



புதன்கிழமையன்று நயா நகர் போலீஸ் நிலையத்துக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர்களிடமிருந்து போன் வந்தது.  மனோஜ் வசிக்கும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து மனோஜ் சஹானி வீட்டில் சோதனை நடத்தினர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். சில உடல் பாகங்கள்  குக்கரில் வேக வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

வீட்டிலிருந்து தப்ப முயன்ற மனோஜ் சஹானியை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.  கொல்லப்பட்டது சரஸ்வதிதான் என்று விசாரணையில் தெரிய வந்தது.  ஏன் கொலை செய்தார், எதற்காக உடல் பாகங்களை வெட்டினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மரம் வெட்டப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு உடலை வெட்டியுள்ளார் மனோஜ் சஹானி. உடல் பாகங்களில் சிலவற்றை அங்குள்ள நாய்களுக்கும் போட்டுள்ளார். கடந்த 2, 3 நாட்களாக நாய்களுக்கு உடல் பாகங்களைப் போட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த ஜோடி அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவது கிடையாதாம்.  எனவே அவர்களைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்