மகாராஷ்டிரா பஸ் விபத்து...உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி

Jul 01, 2023,11:04 AM IST
டில்லி : மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா அருகே நடந்த கோரமான  விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 25 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மகாராஷ்டிராவில் யவட்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சம்ருதி மகாமார்க் எக்ஸ்பிரஸ்வேயில் புல்தானா அருகே திடீரென தீப்பற்றி எரிந்து, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். 



\இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் மற்றும் கன்டெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரைண நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் தேங்காயின் மருத்துவ மகத்துவம்!

news

சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!

news

மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?

news

கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்