புதிய நாடாளுமன்ற திறப்பு.. திமுக, காங்கிரஸ், திரினமூல் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு

May 24, 2023,11:23 AM IST
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.  மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்க போவதை ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளது.

டில்லியின் மத்திய பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28 ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். பார்லிமென்ட் கட்டிடத்தை ஜனாதிபதி தானே திறந்து வைக்க வேண்டும். பிரதமர் எப்படி திறந்து வைக்கலாம்? இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயல் எனக் கூறி எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்து வருகின்றனர்.



மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்ட்சிகள் ஒன்று திரண்டு வரும் நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்து பேசி உள்ளார். இதைத் தொடர்ந்து டில்லியில் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் மத்திய அரசிடம் கேள்வி கேட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்காதது அவரை அவமதிப்பதாகும். இது பழங்குடியின மக்களையே அவமதித்தது போன்றது. இந்த விழாவை ஆம்ஆத்மி புறக்கணிப்பதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ட்வீட் செய்துள்ளார். 

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு அழைக்காமல் பிரதமர் மோடி கட்டிடத்தை திறப்பது அவர்களை அவமதிப்பதை போன்றது. மத்திய அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

திமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் புறக்கணிப்பு

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், கட்டிட திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என நேற்று ட்வீட் செய்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அவர் தான் இந்தியாவின் முதல் குடிமகன். ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் முதல் பிரதிநிதி அவர். கட்டிட திறப்பின் போது அரசு தனது ஜனநாயக மதிப்பையும் , அரசியலைப்பு முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளதால் இந்த நிகழ்வு பரபரப்பாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்