ஹாலிவுட் நடிகர் கொடுத்த முத்தம்: ஷில்பா ஷெட்டிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Apr 04, 2023,03:10 PM IST
மும்பை : ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரி பொது இடத்தில் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரி, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அனைவரின் முன்னிலையிலும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார்.
 


பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக ஷில்பா ஷெட்டி மீது மாநில அரசு சார்பில் ஆபாச வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து ஷில்பா ஷெட்டி சார்நில் முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஷில்பாவின் வழக்கறிஞர், ரிச்சர்ட் கெரி தான் ஷில்பாவை பொது இடத்தில் கட்டிப்பிடித்து, அத்துமீறி நடந்து கொண்டார். ஆனால் ஷில்பா அதற்கு ஒத்துழைக்கவோ, எதிர்க்கவோ இல்லை. அதனால் அவர் மீது எந்த தவறும் இல்லை. 

ஷில்பா மீது எந்த தவறும் இல்லை என்பதால் அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டிருந்தார். ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞரின் இந்த வாதத்தை ஏற்ற  மும்பை செஷன்ஸ் கோர்ட், ஷில்பாவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!

news

நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்

news

வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!

news

கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

news

அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி‌.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்