சாப்பிட்ட பில்லை யார் கொடுப்பது.. அதுக்கு ஒரு சண்டை.. கடைசியில் ஒரு கொலை!

Jun 06, 2023,09:29 AM IST
மும்பை: மும்பையில் சாப்பாட்டு பில்லை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 18 வயது இளைஞர் தனது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் சேர்ந்து அவரைக் கொலை செய்துள்ளனர். அதில்  2 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கொடுமையானது.

கொலை செய்யப்பட்ட நபருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதையடுத்து தனது நண்பர்களுக்கு கோவண்டி பகுதியில் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து  அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரு சாலையோர தாபாவுக்குப் போயுள்ளனர்.



நான்கு பேரில் 2 பேருக்கு வயது 19 மற்றும் 22 ஆகும். இவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் மைனர் வயதுடையவர்கள்.  தாபாவுக்குப் போய் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுள்ளனர். கடைசியில் பில் ரூ. 10,000 என வந்துள்ளது.

இதையடுத்து ஷேர் பண்ணிக் கொடுக்கலாம் என்று ட்ரீட் கொடுத்தவர் கூற, மற்ற நான்கு பேரும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். நீதானே ட்ரீட் கொடுத்தே.. அப்ப பணத்தையும் நீதான் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் ட்ரீட் கொடுத்தவரே பில்லைக் கட்டியுள்ளார்.

அத்தோடு பிரச்சினை முடிந்தது. ஆனால் மேற்கண்ட நான்கு பேரும் சேர்ந்து இன்னொரு விருந்து வைத்திருப்பதாக கூறி பிறந்த நாள் கொண்டாடிய நபரை  அழைத்துள்ளனர். அங்கு கேக் வெட்டி அவருக்கு ஊட்டியும் விட்டனர். அதன் பின்னர் ஆயுதங்களால் அந்த நபரை சரமாரியாக வெட்டியும், குத்தியும் கொடூரமாகக் கொலை செய்து உடலை போட்டு விட்டு தப்பி விட்டனர்.

கொலை செய்த நான்கு பேரில் 2 பேர் அகமதாபாத்துக்குத் தப்பி ஓடி விட்டனர். மைனர் கொலையாளிகள் இருவரும் போலீஸில் சரணடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்ற இருவரையும் அகமதாபாத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்