53 வயதில் 2வது குழந்தைக்குத் தாயான நவோமி கேம்பல்!

Jul 01, 2023,02:11 PM IST
லாஸ் ஏஞ்செலஸ்:  53 வயதாகும் சூப்பர் மாடல் நவோமி கேம்பல் தனது 2 வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.  அவருக்கு  2 வயதில் ஏற்கனவே ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மகன் பிறந்துள்ளார்.

சூப்பர் மாடலாக வலம் வரும் நவோமி கேம்பலுக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் 2வது குழந்தைக்கு அவர் தாயாகியுள்ளார். இந்த முறை மகனைப் பெற்றெடுத்துள்ளார் நவோமி கேம்பல்.



இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார் நவோமி. அதில், எனது லிட்டில் டார்லிங்..  என் மீது அன்பைப் பொழியும் உங்கள் முன்பு இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன். கடவுளிடமிருந்து கிடைத்த நிஜமான பரிசு இது.. ஆசிர்வதிக்கப்பட்டேன். பேபி பாயை வரவேற்கிறேன்.. ஒரு தாயாராவதற்கு கால தாமதம் ஆகவில்லை என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார் நவோமி.

மகனின் பெயரை நவோமி இன்னும் வெளியிடவில்லை.  மேலும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை யார் என்பதையும் அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதேபோல தனது மகளின் பெயரையும் கூட அவர் இதுவரை வெளியிடவில்லை என்பது நினைவிருக்கலாம்.  எந்த வெளிச்சமும் படாமல் ரகசியமாக தனது மகளை அவர் வளர்த்து வருகிறார்.

இது தத்து மகளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, எனது தத்து மகள் அல்ல.. எனது மகள் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார் நவோமி என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்