6 ஆம் ஆண்டில்  மக்கள் நீதி மய்யம்... வாழ்த்துறதுக்கு பதிலா இப்படி வறுத்தெடுக்குறாங்களே!

Feb 22, 2023,09:56 AM IST
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி 6வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் வாழ்த்துகளுக்கு நிகராக வசவுகளும் வந்து குவிந்துள்ளன.



தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நட்சத்திரமாக வளர்ந்தவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த 60 ஆண்டுகளாக சினிமாவில் டாப் ஹீரோவாக, பல சாதனைகளை படைத்த சகலகலா வல்லவனாக வலம் வந்து கொண்டிருந்தவர், இந்தியன் 2 படத்தால் சினிமாவிற்கு 4 ஆண்டுகள் பிரேக் எடுக்க வேண்டியதாயிற்று.


எல்லோரும் திண்ணையில் அமர்ந்து ரஜினிகாந்த் எப்படா அரசியலுக்கு வருவார் என்று போயஸ் தோட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில்.. யாரும் எதிர்பாராத வகையில் "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ" என்று தடாலடியாக அரசியல் களத்தில் குதித்தார் கமல்ஹாசன். 

2018 ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். இந்த தொடக்க விழா இந்திய அளவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு, பேசப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாம் வந்திருந்தார். அடுத்தடுத்து சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தார். 

இடையில் கட்சிக்குள் ஏகப்பட்ட சலசலப்புகளும் கிளம்பின. அதையும் சமாளித்தார். இந்த நிலையில் கமல்ஹாசனின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து, தற்போது பிரச்சாரமும் செய்து வருகிறார். இது கட்சிக்குள்ளேயே கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட பின்னணியில்தான், மக்கள் நீதி மய்யம் துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்து, 6 ஆம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைப்பதை மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார் கமல்ஹாசன். அதில், ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக் கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கமலின் இந்த ட்வீட்டிற்கு வாழ்த்துச் சொன்னவர்களை விட வச்சு செஞ்சவர்கள் தான் அதிகம். " 5 வருஷம் ஆயிடுச்சு. ஆனா நீங்க எதுக்கு கட்சி ஆரம்பிச்சிங்கன்னு எங்களுக்கு இதுவரை தெரியல". " தெரியாம தான் கேட்குறேன். மக்கள் எல்லாரையும் என்ன நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டு உங்க பின்னால வர முட்டாள்ன்னு நினச்சீங்களா? கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்" என கண்டபடி லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.

"ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றதும் அவசர அவசரமாக கட்சி ஆரம்பித்தீர்கள். இப்போது எதற்காக கட்சி வைத்துள்ளீர்கள் என யாருக்கும் தெரியவில்லை. திமுக.,விற்கு எடுபிடி வேலை பார்க்க எதற்கு ஒரு தனிக்கட்சி?". "குடும்ப அரசியலை எதிர்ப்பதாக சொல்லி அரசியலுக்கு வந்தீங்க. இப்போது அதே திமுக.,வுடன் கூட்டணி வைத்து அவர்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என கமலை கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆண்டவர் இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்.. காத்திருப்போம்.. வழி பார்த்திருப்போம்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்