ஓணம் பண்டிகை கொண்டாட்டம்....வந்தலோ....வந்தலோ....

Aug 29, 2023,01:21 PM IST

கொச்சி :  கேரளத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் சாதி, இன, மதம் வேறுபாடு இன்றி ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தற்போது மலையாளம் மொழி பேசும் மக்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர் .அவர்கள் அனைவரும் தனது சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


   கேரள மக்கள் தங்கள் இல்லங்களில் அத்த பூ  கோலம் இட்டு, விதவிதமான உணவு சமைத்து, புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் பத்து நாள் விழாவான இறுதி நாள் ஓணம் திருவிழாவினை கொண்டாடி சிறப்பித்து வருகின்றனர். மேலும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தை  புத்தாண்டு விழாவாகவும் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை அறுவடை நாள் என்றும் அழைப்பர் . இந்த புத்தாண்டு வாழ்த்துக்களை சக  நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களையும்,நன்றியினையும் தெரிவித்து வருகின்றனர்.




 தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சாதி மத இனம் வேறுபாடு இன்றி இன்முகத்தோடு வரவேற்று தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.மேலும் கோயில்களில் செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.

கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தின் ,கோவை, சென்னை ,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரியில் ஓணம் கொண்டாட்டம்:


    ‌‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக  இங்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர். மலர் சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விதவிதமான வண்ண மலர்களை வாங்கி வீடுகள் முழுவதும் அலங்கரித்து ஓணத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.


      கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனையில் அத்தப்பூ கோலமிட்டு "சத்யா" என்ற விதவிதமான உணவு சமைத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இங்கு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


நீலகிரி மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்:




       நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . இங்கு மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு கோலத்தைச் சுற்றி நடனம் ஆடினர். இதில் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இங்கு செண்டை மேளம் முழங்க மாணவிகளின் நடனம் ஆடி உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


கோவை மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்:

        

      கோவை மாவட்டத்தில் மலையாளம் மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அதனால்  கோவை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உள்ள மருத்துவமனை, கல்லூரிகளில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் அனைவரும் அத்தப்பூ கோலமிட்டு நடனம் ஆடியும்,பட்டாசு வெடித்தும்  தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


     சென்னையிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இப்படி தமிழக முழுவதும் உற்சாகத்துடன் ஓணம்  பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓணம் பண்டிகை ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக உள்ளது எனக் கூறி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுநர் போன்றோர் மலையாளம் மொழி பேசும் கேரள மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்