"கதவைத் திற காத்து வரட்டும்".. விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த பயணி.. ஷாக்!

May 26, 2023,04:24 PM IST
சியோல்: தென் கொரியாவில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது ஒரு பயணி தெரியாமல் கதவைத் திறந்து விட்டதால் 9 பயணிக்கு பலத்த காற்று முகத்தில் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. தென் கொரியாவின் சியோல் நகருக்கு 200 பயணிகளுடன் ஏசியானா ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. டேகு சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த அந்த விமானம் ரன்வேயை நெருங்கிய நிலையில் திடீரென விமானத்தின் அவசர கால கதவு ஒன்றை ஒரு பயணி திறந்து விட்டார். 



இதனால் பலத்த காற்று விமானத்துக்குள் வீசத் தொடங்கியது. விமானம் ரன் வேயை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது கதவு திறக்கப்பட்டதால் காற்று பலமாக வீசியதில் ஜன்னலோரம் இருந்த பயணிகள் திக்குமுக்காடிப் போனார்கள். காற்று முகத்தில் வேகமாக பட்டதால் அவர்களால் மூச்சு விட முடியவில்லை.

ரன்வேயிலிருந்து 650 அடி உயரத்தில் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்தது.  இருப்பினும் நல்ல வேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானம் பின்னர் தரையிறங்கியதும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட 9 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து விட்ட பயணியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொட்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் பறக்கும்போது அவசர கால கதவைத் திறந்தால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.  நடு வானில் இதுபோலநடந்திருந்தால் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு விமானம் கிளம்பவிருந்த நிலையில் அரசியல்வாதி ஒருவர் அவசர கால கதவைத் திறந்தது பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்