ஷீலா தீட்ஷித் பங்களாவில் குடியேற போகிறாரா ராகுல் காந்தி ?

Jul 12, 2023,02:58 PM IST
டெல்லி :  காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வசித்து வந்த பங்களாவுக்கு இடம் பெயருவார் என்று தெரிகிறது.

சூரத் கோர்ட் தனக்கு அளித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத்  ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் எம்பி.,யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது உறுதியாகி விட்டது. 

இதனையடுத்து டெல்லியில் ராகுல் காந்தி தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் சொல்லி விட்டனர். அதன் பேரில் ராகுல் காந்தியும் தனது வீட்டை காலி செய்து கொடுத்து விட்டார். இதையடுத்து டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வாழ்ந்த 3 அறைகள் கொண்ட வீட்டிற்கு ராகுல் காந்தி மாறப் போகிறாராம். தெற்கு டில்லியின் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள இந்த பங்களாவில் தற்போது ஷீலாவின் மகன் சந்தீப் தீக்ஷித் வசித்து வருகிறார்.




தற்போது ராகுல் காந்தி அந்த வீட்டிற்கு மாற உள்ளதால் அதற்கு அருகில் உள்ள ஷீலா தீட்ஷித்திற்கு சொந்தமான வீட்டிற்கு சந்தீப் தீட்ஷித் மாறப் போகிறாராம். ராகுல் தற்போது குடியேற போகும் வீட்டில் தான் ஷீலா தீட்ஷித் தனது கடைசி காலங்களை கழித்தார். விரைவில் புதிய வீட்டிற்கு ராகுல் இடம் மாறுவார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே எம்பி.,யாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆவலாக இருக்கும் சமயத்தில், ராகுலின் இந்த புதிய இடம் மாற்றம் நிச்சயம் நல்ல மாற்றமாக அமையும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மக்களை நேரடியாக சந்தித்து வரும் ராகுல் காந்தி வயல்களுக்குச் சென்று நாற்று நடுகிறார்.. லாரி பயணம் மேற்கொள்கிறார்.. மெக்கானிக் ஷாப்புகளுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்