சென்னை : ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜெயிலர் படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்ட ரஜினி, தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தலைவர் 170 படத்திற்காகவும் ரஜினி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் தான் தலைவர் 170 படத்தை இயக்க போகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் மிக முக்கியமான ரோலில் பாலிவுட் டாப் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இதற்கு முன் அந்த கன்னூன், ஹம் உள்ளிட்ட சில படங்களில் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இநந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மட்டுமல்ல, கமலும் பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்திலும் அமிதாப் பச்சன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் அமிதாப் பச்சனுக்கு என்று மீண்டும் ரசிகர் கூட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}