சன் டிவிக்கு குட்பை.. விஜய் டிவியுடன் கைகோர்க்கும் ராதிகா.. விஜய் அப்பாவுடன்!

Feb 25, 2023,01:02 PM IST
சென்னை : பல ஆண்டுகளாக சன் டிவியுடன் கைகோர்த்து தனது ராடன் மீடியா சார்பில் பல எவர்க்ரீன் சீரியல்களை தயாரித்து, நடித்து வந்த ராதிகா, தற்போது முதல் முறையாக விஜய் டிவியுடன் கைகோர்க்க உள்ளார்.



இந்த சீரியலில் இன்னொரு சிறப்பும் அடங்கியுள்ளது. அதாவது ராதிகா தயாரிக்கும் இந்த புதிய சிரீயல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்கிறார் பிரபல நடிகரும், டைரக்டரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

சன் டிவியில் சித்தி, அண்ணாமலை, செல்வி, தாமரை, சித்தி 2 பல டாப் ரேட்டிங் மெகா சீரியல்களை ராடன் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்து வந்தார் ராதிகா. இந்த சீரியல்களில் லீட் ரோலிலும் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனார். கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்து வந்த ராதிகா, சினிமா மற்றும் அரசியலில் பிஸியானதால் சித்தி 2 சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ராதிகா விலகியதால் சீரியலின் டிஆர்பி அதள பாதாளத்திற்கு சென்றது. இருந்தாலும் கதையை எப்படியோ கொண்டு போய், ஒரு வழியாக நிறைவு செய்தார்கள்.

இனி சீரியல்களில் ராதிகா நடிக்க மாட்டார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் கலர்ஸ், ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பான சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். பிறகு கலைஞர் டிவியிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக விஜய் டிவியும், ராடன் மீடியா கைகோர்த்து புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. ரேஷ்மா லீட் ரோலில் நடிக்கும் இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கிழக்கு வாசல் சீரியல் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் எஸ்ஏசி நடிக்க உள்ளார். நடிகை அஸ்வினி இந்த சீரியல் மூலமாக விஜய் டிவிக்குள் என்ட்ரியாக உள்ளார். ஆனால் இந்த சீரியலில் ராதிகா நடிக்கவில்லை, வெறும் தயாரிப்பு மட்டுமே செய்ய போகிறார் என சொல்லப்படுகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி, விசு இயக்கிய எவர்க்ரீன் சூப்பர்ஹிட் சென்டிமென்ட் படமான சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து, அதை தான் கிழக்கு வாசல் என்ற பெயரில் சீரியலாக எடுக்க போவதாக சொல்லப்படுகிறது. 

விரைவில் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் லீட் ரோலில் நடிக்க போகும் அந்த நடிகர் யார் என்ற கேள்வி தான் விஜய் டிவி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிக்காக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்