2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மனு...ஜூலை 21 ல் விசாரிக்க ஓகே சொன்ன சுப்ரீம் கோர்ட்

Jul 18, 2023,11:54 AM IST
டில்லி : திருடர்கள் அனைவரும் மோடி என்ற பெயர் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேசியதை எதிர்த்து பாஜக நிர்வாகி ஒருவர் குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். 2019 ம் ஆண்டு போடப்பட்ட இந்த வழக்கில் சமீபத்தில் சூரத் கோர்ட் பரபரப்பு தீர்பு வழங்கியது. 

ராகுல் காந்திக்கு, சூரத் கோர்ட் இரண்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரின் லோக்சபா எம்பி., பதவி பறிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சமீபத்தில் ராகுல் காந்தி டில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து விட்டு, தனது தாய் சோனியா காந்தி வசிக்கும் வீட்டில் வசித்து வருகிறார். விரைவில் அங்கிருந்து டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் வசித்த வீட்டிற்கு ராகுல் காந்தி மாற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.



இதற்கிடையில் சூரத் கோர்ட் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க ஏற்றதல்ல என சமீபத்தில் குஜராத் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட இருண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்திர சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகுல் காந்தியின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், இந்த மனு மீதான விசாரணை ஜூலை 21 ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

“நான் இருக்கேன்” ... மனிதம் மலர்கையில் – (பகுதி 5)

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்