ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ப்ரொமோஷன் நிறுத்தி வைப்பு

May 13, 2023,09:16 AM IST

டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்து, அவரது எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

குஜராத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் குறைவாக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும், அதிக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும் மறுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் இருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.



இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குஜராத் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு சட்ட விரோதமானது எனக் கூறி நீதித்துறையை சேர்ந்த 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளதாக குஜராத் ஐகோர்ட் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

இருந்தாலும் மெரிட் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும் படி சுப்ரீம் கோர்ட்டை, குஜராத் ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

மோடி என்ற பெயரை அவதூறாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்தவர்தான் இந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இதனால் ராகுல் காந்தியின் எம். பி பதவி பறிபோனது என்பது நினைவிருக்கலாம். இந்த தீர்ப்பின் பரபரப்பு கூட இன்னும் மாறாத நிலையில் இவருக்கு பதவி உயர்வு வந்ததால் சலசலப்பும் சர்ச்சையும் எழுந்தது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்