இன்று சங்கடம் தீர்த்து செளபாக்கியம் தரும் சங்கடஹர சதுர்த்தி

Feb 09, 2023,10:00 AM IST

சென்னை : எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் ஞான முதல்வன், முழு முதற்கடவுள் என போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தான் துவங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படாது என்பதுடன், அந்த காரியம் வெற்றியில் முடியும். அப்படிப்பட்ட விநாயப் பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம். 


சதுர்த்தி திதிகளில் உயர்வானதாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம் ஆனாலும் விலகும் என்பது ஐதீகம். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கிடும் சதுர்த்தி என்பது இதற்கு பொருள். 


பிப்ரவரி மாதம் 09 ம் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்த நாளில் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். அருகம்புல் சாற்றி வழிபட்டால் பிறவிப்பிணிகள் விலகும். இன்பம் பெருகும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள் பதிகங்களை சொல்லி அவரை வழிபட வேண்டும். நைவேத்தியமாக விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபடலாம். 


அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோங்காயை சிதறு காய் விடுவது கஷ்டங்களை சிதறி ஓட வைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பண தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.


சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்