சென்னை : ட்விட்டரில் தனது கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவக்கி உள்ளார். அது மட்டுமல்ல, கணக்கை துவங்கிய கையோடு ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மாஸ்க்கை பின்தொடர்ந்து அவரையே கலாய்த்துள்ளார்.
நாம் தமிழர் சீமான், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 20 பேரின் ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு யார் காரணம் என்ற விவாதம் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீமான் கணக்கு முடக்கத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த முடக்கத்தை நீக்கவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ட்விட்டரில் புது கணக்கை துவங்கிய சீமான், கணக்கை துவங்கிய கையோடு ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கை பின்தொடர்ந்துள்ளார். வேறு யாரையும் அவர் பாலோ செய்யவில்லை. அதோடு முதல் ட்வீட்டாக, தனக்கு ஆதரவாக கண்டன குரல் எழுப்பிய ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்து விட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்ததை முடக்கி கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையான கருத்தைப் பதிவு செய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}