செந்தில் பாலாஜி விவகாரம்: பிடியை இறுக்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

Jul 03, 2023,02:25 PM IST
சென்னை : அமலாக்கத்துறையை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் வேகம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த சம்மன்களால் தமிழக அரசியல் களமே பரபரப்பாகி உள்ளது.

செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் நடவடிக்கையை துவக்கிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் உறுவினர்கள், நண்பர்கள் வீடுகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.



இறுதியாக செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லும் சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது அமைச்சர் பதவி தொடர்பாக விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

மற்றொரு புறம் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான விசாரணை, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெற்ற கவர்னரின் உத்தரவிற்கு எதிரான மனு என பல மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் விசாரைணக்கு தயாராக உள்ளன. இதற்கிடையில்மத��தியகுற்றப்பிரிவு போலீசாரும் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் களத்தில் இறங்கி உள்ளதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு விசாரைணயை விரைபடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணியாற்றிய 1500 ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 300 போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2015 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.  அமலாக்கத்துறையுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையும் இணைந்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக பிடி இறுகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்