கேப் விடாமல் சிரிக்கும் அனுஷ்கா...விநோத சிரிப்பு நோய் பாதிப்பா ?

Feb 17, 2023,02:29 PM IST
சென்னை : நடிகை அனுஷ்கா ஷெட்டி விநோதமான சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் இந்திய திரையுலகையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. 



தமிழில் மாதவன் நடித்த இரண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா. தெலுங்கு, தமிழில் பிரபலமான நடிகையான அனுஷ்கா ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டும் ஹீரோயினாக, டூயட் பாடும் நாயகியாக தான் இருந்தார். தெலுங்கில் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அருந்ததி படம் அனுஷ்காவின் சினிமா இமேஜை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. டாப் ஹீரோக்களுக்கு இணையாக அனுஷ்கா வலம் வர துவங்கினார். 

அருந்ததி படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய படங்களின் வாய்ப்பு உள்ளிட்ட பல பட வாய்ப்புக்கள் வந்தது. தமிழிலும் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி, கார்த்தி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்தார். சிங்கம் படம் இவருக்கு நிறைய வாய்ப்புக்கள் தந்தாலும், ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் அனுஷ்காவை சர்வதேச லெவலுக்கு பிரபலமாக்கியது. 




பாகுபலி பட நாயகியான பிறகு பிரபாஸ் உடன் இணைத்து கிசுகிசுக்களிலும் பேசப்பட்டார். அனுஷ்காவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதற்கு அவரின் அழகான சிரிப்பும் ஒரு காரணம். ஆனால் அந்த சிரிப்பு தான் இப்போது மீண்டும் அவரைப் பற்றிய பரபரப்பாக பேச வைத்துள்ளது. அனுஷ்கா சிரிக்க ஆரம்பித்தால் கேப் விடாமல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரிப்பாராம்.இதற்கு காரணம் அவர் விநியோக சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது என தகவல்கள் பரவியது.

இது உண்மை தான் என்பது போல், தனது பேட்டியில் அனுஷ்காவும் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவி, தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவே இது பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என அனுஷ்காவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தான் சமந்தா, விநோத சரும நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாகவும் ஒரு தகவல் சிவிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அனுஷ்காவும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாப் ஹீரோயின்களுக்கு ஏன் இந்த நிலை என பரிதாபமாக கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!

news

நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்

news

வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!

news

கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

news

அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி‌.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்