டில்லி : ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடையில்லை. அது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது சுப்ரீம் கோர்ட். இதனால் இனி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடித் தீர்ப்பிற்கு ஜல்லிக்கட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராகவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட், விலங்குகள் நல அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒருமித்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும். ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டம் அரசியலைப்பு சட்டத்திற்கு முரணானது கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு அதில் கோர்ட் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஓபிஎஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னையில் பெரும் புரட்சி வெடித்தது. இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் குதித்தனர். உலகம் முழுவதும் இது பேசு பொருளானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன் பின்னர் அந்த சட்டத்தையொட்டி தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இனி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிரந்தரமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}