மே 19 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்

May 15, 2023,05:01 PM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 06 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற்றன. சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24 ம் தேதி துவங்கி மே 03 ம் தேதி வரை நடைபெற்றன.



மே 17 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற அதே தேதியிலேயே 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.  மே 17 ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பி இருந்த நிலையில் மே 17 ம் தேதி காலை 10 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதே நாளில் பகல் 2 மணிக்கு 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்