ஐதராபாத் : தெலுங்கானாவில் ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய நிகழ்ச்சி நடந்துள்ளது. ஊர் மக்கள் ஒன்றாக கூடி இந்த திருமணங்களை நடத்தியும் வைத்துள்ளனர்.
தெலுங்கானாவில் கோதகுதம் மாவட்டம் பத்ராத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சத்திபாபு. இவருக்கு வேறு வேறு கிராமங்களைச் சேர்ந்த சொப்னா மற்றும் சுனிதா ஆகியோருடன் காதல் ஏற்பட்டது. இரண்டு பெண்களுடனும் கடந்த 3 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்தார் சத்திபாபு. இதில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தையும், மற்றொரு பெண்ணுக்கு பெண் குழந்தையும் உள்ளன.
இந்நிலையில் சத்திபாபு, இரண்டு பெண்களுடனும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் விவகாரம் இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கும் தெரிய வரவே விவகாரம் பூதாகரமானது. தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி இரு பெண்களின் குடும்பத்தினரும் சத்திபாபுவிடம் சண்டையிட்டுள்ளனர். இதனால் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் சத்திபாபு.
இதனையடுத்து பத்திரிக்கை அடித்து, ஊரை அழைத்து இரண்டு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் வைரலானதால் மீடியாவிலும் கசிய துவங்கியது. இதனால் அதிகாரிகள் வந்து திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என இரு வீட்டாரும் பயந்து போய் இருந்தனர். இதனால் திட்டமிட்ட நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே அவசர அவசரமாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.
பழங்குடியினத்தவர்களில் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக் கொள்ளதக்கது தான். இதற்கு முன்பும் இது போல் பல திருமணங்கள் நடந்துள்ளன. ஆனால் இரு குழந்தைகளும் அருகில் இருக்க, இரண்டு பெண்களையும் சத்திபாபு திருமணம் முடித்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காத்துவாக்குல 2 காதல் என்று ஒரு படம் வந்தது. அதில், ஐ லவ்யூ 2 என்று சமந்தா, நயன்தாராவிடம் காதலைச் சொல்வார் விஜய்சேதுபதி.. அதேபோல இங்கு ஒருவர் காதலித்து கல்யாணமும் செய்து, கதையை நிஜமாக்கி விட்டார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}