லால் சலாம் ஃபர்ஸ்ட் லுக் : ஐஸ்வர்யா ரஜினிக்கு நன்றி சொன்ன தொப்பி வாப்பா

May 09, 2023,12:15 PM IST
சென்னை : லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தொப்பி வாப்பா கெட்அப்பில் ரஜினி வருவது போன்ற தோற்றத்திற்கு தொப்பி வாப்பாவின் மாடலை பயன்படுத்தியதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு தொப்பி வாப்பா குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த், தொப்பி வாப்பா என்ற இஸ்லாமியர் ரோலில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. 



லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார் ரஜினி. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் தலையில் தொப்பி, தாடியுடன் இஸ்லாமியர் தோற்றத்தில் ரஜினி வருவது போன்ற போஸ்டர் இடம்பெற்றிருந்தது. இது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் ரஜினியின் இந்த கெட்அப், பெயர் ஆகியன தொப்பி வாப்பா பிரியாணி கடையின் மாடல் ஆகும். இதைத் தான் இந்த படத்தில் ஐஸ்வர்யா பயன்படுத்தி உள்ளார். இதற்காக தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனத்தின் சார்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தின் போஸ்டரை வைத்து ஒரு பக்கம் மீம்களும், டிரோல்களும் சோஷியல் மீடியாவில் பரவி வந்தாலும், மறு புறம் ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை ஹிட் ஆக்கி வருகிறார்கள்.

லால் சலாம், ஜெயிலர் என ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஆர்ஜெ ஞானவேல் தலைவர் 170 படத்தையும் , யோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தையும் இயக்க உள்ளதாக வெளியாகி வரும் தகவல்களின் உறுதியான அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்