ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயா? எங்கன்னு தெரியுமா?

Jul 08, 2023,11:27 AM IST
டேராடூன் : இந்தியாவில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தக்காளி விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எகிறி வருகிறது. இந்திய நகரங்கள் பலவற்றிலும் பெட்ரோல் விலையை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது. நெட்டிசன்கள் தக்காளி விலையை வைத்தே ஏகப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

தக்காளி விலை திடீரென உயர்ந்ததற்கு மழை, வெயில், உற்பத்தி குறைவு, சந்தை வரத்து குறைவு என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தாங்க முடியவில்லை என மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையிங் உத்திரகாண்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உத்தர்காசி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.180 முதல் 200 ஆக உள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றிலும் தக்காளி விலை ரூ.200 முதல் 250 வரை விற்பனையாகிறது. 

தக்காளி விலையும் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததே தற்போது தக்காளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மலைப்பிரதோ மாநிலங்களில் கடும் மழை பெய்ததும் தக்காளி விலை ஏற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்