ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி.. நைட்டெல்லாம் தூங்க முடியலை..!

Jun 16, 2023,10:07 AM IST
சென்னை: சென்னையிலும் அக்கம் பக்கத்து மாவட்டங்களிலும் வெயில் மீண்டும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இரவில் புழுக்கம் அதிகரித்திருப்பதால் மக்களால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை  நிலவுகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது. தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது. அரபிக் கடலில் இந்த சீசனில் முதல் புயல் உருவாகி, மெகா புயலாக மாறி அது கரையையும் கடந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வெயில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.



பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏசி இல்லாமல் தூங்கவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதை விட மோசம், பேனை போடக் கூட முடியவில்லை. போட்டால் அனல் காற்றுதான் வருகிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் வியர்வைக் குளியலில் மக்கள் அவஸ்தைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் 41 முதல் 42 டிகிரி வரை உயரக் கூடும்.  குறிப்பாக 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் போகாமல் இருப்பது மிகவும் நல்லது. தேவைப்பட்டால் மட்டும் போங்க.

இன்னும் 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் நிறைய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஸோ, எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு 2 நாட்களை ஓட்டி விட்டால் பிறகு மழை வந்து நம்மை நனைத்து கொஞ்சம் அனலைக் குறைக்கும்.. பார்க்கலாம்.

ஏப்பா தம்பி.. அந்த ஃபேனை 15ல வய்யி!

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்