"இந்தியாவில் மனித உரிமை".. மோடியிடம் பேசுங்க.. பைடனுக்கு அமெரிக்க எம்.பிக்கள் கோரிக்கை

Jun 21, 2023,01:54 PM IST

வாஷிங்டன்: இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக எழும் புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் ஜோ பைடன் கேட்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பிக்கள் 70 பேர் பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இன்று நியூயார்க்கில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். மேலும் பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளார்.




இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு எம்.பிக்கள் 75 பேர் (செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பிக்கள்) சேர்ந்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக வரும் புகார்கள் கவலை அளிக்கின்றன. அதுகுறித்து பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்த எம்பிக்களில் பலர் அதிபர் ஜோ பைடன் சார்ந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த எம்.பிக்களில் இந்தியாவைப் பூர்விமாகக் கொண்ட பிரமீளா ஜெயபாலும் ஒருவர் ஆவார்.  இவரும் செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹாலன் ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டனர்.


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:


இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை தருகிறது. பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. இன்டர்நெட் தடை அதிகரித்து வருகிறது. சிவில் சொசைட்டி குழுக்கள் குறி வைக்கப்படுகின்றன.


எந்த ஒரு தனிப்பட்ட தலைவருக்கோ, அரசியல் கட்சிக்கோ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் இதற்கு முக்கிய இடம் உண்டு.


நீங்கள் பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது இதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இரு நாட்டு உறவுகள் வலுவாக இருப்பதற்கும், நீண்ட காலம் இது நீடிக்கவும் இந்த கேள்வி அவசியம் என்று வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பிரதமரான பிறகு இதுவரை 5 முறை அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.  ஆனால் இப்போது வந்துள்ளதுதான் முழு அளவிலான அரசு முறைப் பயணமாகும் என்பதால் பிரதமர் வருகையை அமெரிக்கர்கள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர்.


மணிப்பூரில் பெரும் கலவரம் மூண்டு அடக்கப்பட முடியாமல் அந்த மாநிலம் திணறிக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதை இந்தியாவிலும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்