பிச்சைக்காரன் 2 .. டிரைலரே இப்படின்னா... அப்போ படம் எப்படி இருக்கும்? ஆத்தாடி அதிருதே!

Feb 11, 2023,02:56 PM IST
சென்னை : பிச்சைக்காரன் 2 டிரைலர் வேற லெவலில் இருப்பதாக விமர்சனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.



நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பார் என பல முகங்களைக் கொண்ட விஜய் ஆன்டனி, தயாரித்து நடித்த படங்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற படம் பிச்சைக்காரன். 2016 ம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தாய் பாசத்தை வித்தியாசமான கதையுடன் கலந்து கொடுத்திருந்தார். அந்த படத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிச்சைக்காரர் ஒருவர் கூறும் ஐடியா, பண மதிப்பிழப்பு சமயத்தில் இந்தியா முழுவதும் டிரெண்டானது.

தாய் உயிர் பிழைப்பதற்காக கோடீஸ்வரன் ஒருவன் பிச்சை எடுப்பது தான் படத்தின் கதை. இதில் விஜய் ஆன்டனியின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 எடுக்க உள்ளதாக விஜய் ஆன்டனி அறிவித்தார். இந்த படத்தின் மூலம் டைரக்டராகவும் அவதாரம் எடுத்துள்ளார். படம் பற்றிய அறிவிப்பிலேயே சோஷியல் மீடியாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

யார் பிகிலி? ஆன்டி பிகிலி யார்? என்ற கேள்விகளுடன் வந்த ட்வீட், மண்டை ஓடுகள் குவிந்து கிடக்கும் இடத்தில் காளி போன்ற உருவம் கொண்ட பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட்லுக் அனைவரையும் கொஞ்சம் குழப்பமடைய வைத்தது. இது என்ன இப்படி ஒரு ஃபர்ஸ்ட் லுக்? சாமி படம் ஏதாவது எடுக்க போகிறாரா என்று கூட விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனால் இந்த விமர்சனங்களை, எதிர்பார்ப்புக்களாக மாற்றி அனைவரையும் படத்தின் கதை என்ன? எப்போ ரிலீஸ் செய்வீங்க என கேடவ்க வைத்து விட்டார் விஜய் ஆன்டனி. பிச்சைக்காரன் 2 படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டிரைலரை அவர் தனது யூட்யூப் சேனலில் இன்று வெளியிட்டுள்ளார். டிரைலரின் ஆரம்பத்திலேயே பிரம்மாண்ட பங்களா, தான் வளர்த்த எலியை பிடித்து, பசியுடன் அடைத்து வைத்துள்ள பாம்பிற்கு கொடுக்கும் வில்லன். டிவி.,யை ஆன் செய்ததும் அதில் வரும் டாக்டர் ஒருவர் மூளை மாற்ற அறுவை சிகிச்சை பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு வில்லன் யோசிக்க, அந்த சமயத்தில் விமானம் ஒன்று தரையிறங்குவதாக டிரைலரை அமைந்துள்ளார். 

ஹீரோ, ஹீரோயின், ஆக்ஷன் காட்சி, பாடல், மின்னல் வேகத்தில் மாறும் ஷாட்கள் என எதுவும் இல்லாமல் ஒரு டிரைலரை உருவாக்கி உள்ளார். பிச்சைக்காரன் படத்தில் பணமதிப்பிற்கு வருவதற்கு முன்பே அது பற்றிய சீனை தனது படத்தில் வைத்து கவனத்தை ஈர்த்தார். பிச்சைக்காரன் 2 டிரைலரில், டாக்டர் ஒருவர் பேட்டி அளிப்பது போன்ற ஒரே ஒரு சீனை மட்டும் வைத்து அனைவரையும் படம் பற்றிய பேச வைத்து விட்டார். 

Money is injurious to World என டிரைலரின் ஆரம்பத்திலும், முடிவிலும் இடம்பெறும் வாசகம், இவர் என்ன சொல்ல வருகிறார்? இது பணத்திற்கு எதிரான படமா? என அனைவரையும் யோசிக்க வைத்து விட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் தனது இசையில் மிரட்டி உள்ள விஜய் ஆன்டனி, டிரைலரிலேயே ஒரு டைரக்டராக ரசிகர்களின் சபாஷினை பெற்று விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்