என்னங்க சொல்றீங்க... "எக்ஸ்" பயன்படுத்துறவங்க குறைஞ்சுட்டாங்களா?

Oct 01, 2023,01:28 PM IST

நியூயார்க் : உலகம் முழுவதிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஜூலியா பூர்ஸ்டின் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக ட்விட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ட்விட்டரில் தான் அதிகமான தகவல்களும் பகிரப்பட்டதால் பேஸ்புக்கையே முந்தி விட்டது ட்விட்டர். பல புது புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பல விதங்களில் ட்விட்டரை பலரும் கையாள துவங்கினர். உலக தலைவர்கள், பிரபலங்கள், சாமானியர்கள் என அனைவரும் இதில் வந்து குவிந்தனர்.


இந்நிலையில் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கினார். அதற்கு பிறகு இதில் பல மாற்றங்களை செய்தார். இதில் பல மாற்றங்கள் குழப்பத்தையே ஏற்படுத்தின. இருந்தாலும் பயனாளர்களுக்கு எளிதாகவும், நம்பகமானதாகவும் இருந்ததால் பலரும் ட்விட்டரில் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என மாற்றி அறிவித்தார் எலன் மஸ்க்.




இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் நிறுத்தின் சிஇஓ ஜூலியா சமீபத்தில் 45 நிமிடங்கள் நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். இதில் தங்களின் நிறுவனம் பற்றி பலரும் அறியாத பல தகவல்களை அவர் தெரிவித்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறுகையில், எக்ஸ் நிறுவனத்தில் தனது 12 வார பணிகள் பற்றி விளக்கினார்.

அவர் கூறுகையில், எலன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு எக்ஸ் தளம் தனது தினசரி பயனாளர்களை இழந்து வருகிறது. தற்போது எக்ஸ் தளத்தின் தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை 225 மில்லியனாக மட்டுமே உள்ளது. கிட்டதட்ட 11.6 சதவீதம் தினசரி பயனாளர்களை, அதாவது 10 மில்லியன் பயனாளர்களை இந்நிறுவனம் இழந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய போது தினசரி ட்விட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 254.5 மில்லியன் ஆக இருந்தது.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்