தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 79-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடம் பிடித்து அசத்தினார்.
ஏப்ரல் 19ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் சதுரங்க ஆர்வலர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அகாடமி செயலாளர் ஆர். மாடசாமி தலைமையில் இந்தப் போட்டி நடைபெற்றது. தமிழக சதுரங்கக் கழக நடுவர் எஸ். சையது மதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தேசிய நடுவர் எஸ்.அஜ்மல்கான் போட்டிகளை முறைப்படி வழிநடத்திச் சென்றார்.
இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வனச்சரகர் எஸ். அமான்முல்லா கலந்துகொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

அனைவரும் பங்கேற்கும் வகையிலான திறந்த நிலை பிரிவில், என். சாய் சரவணா முதலிடத்தைப் பிடித்தார். தேனியைச் சேர்ந்த அ. ஹரிஸ் 8வது இடத்தைப் பிடித்தார்.
போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் இத்தகைய போட்டிகள் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}